உள்நாடு

லங்கா ஹொஸ்பிடல்ஸ் வைத்திருக்கும் பங்குகள் திறைசேரிக்கு!

ஶ்ரீலங்கா இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் பணிப்பாளர் சபையின் முக்கிய தீர்மானம் தொடர்பில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் பொது நிறுவனத் திணைக்களம் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக லங்கா ஹொஸ்பிடல்ஸ் கார்ப்பரேஷன் பிஎல்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

லங்கா ஹொஸ்பிடல்ஸ் கார்ப்பரேஷன் பிஎல்சியில் உள்ள ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் வைத்திருக்கும் பங்குகளை திறைசேரியின் செயலாளருக்கு மாற்றுவதே இந்த தீர்மானமாகும்.

இந்த முடிவின் ஒரு பகுதியாக, மேற்கூறிய பங்குகளை மாற்றுவதற்கு வசதியாக பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தலைவரிடம் முறையான கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அடுத்து ஆட்சி அமைக்கும் எந்தவொரு அரசாங்கத்திலும், அமைச்சராக இருப்போம்: மனோ

40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – பிரதமர் ஹரிணி வௌியிட்ட தகவல்

editor

தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

editor