விளையாட்டு

லங்கா பிரிமியர் லீக் போட்டி 2020 – ஆகஸ்ட் முதல்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஆகஸ்ட் 28ம் திகதி முதல் செப்டம்பர் 20ம் திகதி வரை லங்கா பிரிமியர் லீக் போட்டி 2020 இற்கான தொடரை நடத்த முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

குறித்த போட்டிகள் ஆகஸ்ட் 8ம் திகதி நடைபெறவிருந்தபோதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பின்தள்ளி வைக்கப்பட்டன.

இந்தநிலையில் சுகாதார அமைச்சு அனுமதி வழங்குமானால் அடுத்த மாத இறுதியில் இந்தப்போட்டிகளை நடத்தமுடியும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தப் போட்டிகளில் பங்கேற்க 70 சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் 10 வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களும் இணக்கம் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார் சஹீட் அப்ரிடி

சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி!

editor

நண்பா உன்னில் பெருமையடைகிறேன் – மஹேல