வகைப்படுத்தப்படாத

லக்‌ஷ்மன் யாபாவின் மகனை கைது செய்யுமாறு வௌியிடப்பட்டிருந்த பிடியாணை மீளப்பெறப்பட்டது

(UDHAYAM, COLOMBO) – வாகன விபத்தொன்று தொடர்பில் 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் தொடரப்பட்டிருந்த வழக்கிற்கு முன்னிலையாகாத காரணத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாபா அபேவர்தனவின் மகன் ஓசத யாபா அபேவர்தன இன்று நீதிமன்றில் முன்னிலையானார்.

அதன்படி , அவருக்கான பிடியாணையை மீளப்பெற கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்கசூரிய உத்தரவிட்டுள்ளார்.

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்த வாகன விபத்து தொடர்பில் கருவாத்தோட்டம் காவற்துறை வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் , நீதிமன்றில் முன்னிலையாகாததால் நேற்று அவருக்கு இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தொழிற்பயிற்சி அதிகார சபையினால் இலவச சாரதி பயிற்சி

HRW asks Govt. to end arbitrary arrests, abuses against Muslims

இருவேறு இடங்களில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு