உள்நாடுவணிகம்

ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனத்துக்கு ஆண்டின் சிறந்த நோயாளர் காவு வண்டிச் சேவைக்கான ஏசியா மிரக்கல் விருது

ஏசியா மிரக்கல் 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த தனியார் நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) சேவை வழங்குநர் எனும் விருதை ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனம் வென்றுள்ளது.

மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனம் 1600 இற்கும் மேற்பட்ட தாதியர் பணியாட்டொகுதியொன்று பணியாற்றும் இலங்கையின் மிகப் பெரியதும் முதன்மையானதுமான தாதியர் சேவை வலையமைப்பினை கொண்டுள்ளது.

இந் நிறுவனத்தின் நோயாளர் காவு வண்டி பிரிவு இலங்கையில் தனியார் துறைக்குச் சொந்தமான அதிக நோயாளர் காவு வண்டிகளை கொண்டதாக விளங்குகிறது.

2020 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலப்பகுதியிலேயே பொது மக்களின் நலன் கருதி தமது நிறுவனத்துக்குச் சொந்தமான தீவிரச் சிகிச்சை பிரிவு வசதிகளுடன் கூடிய சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு நோயாளர் காவு வண்டிகளை சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக அளித்த இலங்கையின் ஒரே தனியார் சுகாதார சேவைகள் நிறுவனம் எனும் பெருமையும் ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனத்தையே சாரும்.

மேற்படி விருது விழாவில் இந்த விருதை பெறும் வாய்ப்பை நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான மனுஜ ஹேவாவசம் அவர்களின் யோசனைக்கமைய இந்த விருதின் உண்மையான பங்குதாரர்களான பல ஆண்டு காலமாக அங்கு பணியாற்றும் சாரதிகளுக்கே வழங்கப்பட்டமை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணமாக அமைந்தது.

இந்த செயல் விருது விழாவில் பங்கேற்ற அனைவரினதும் பாராட்டை பெற்றது.

Related posts

சுயாதீன உறுப்பினராக செயற்படுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு

editor

கல்வியியல் கல்லூரிகளுக்கு நிரந்தர பீடாதிபதிகளை நியமிக்க தீர்மானம்

கிழக்கு மாகாண தமிழ்மொழி பாடசாலைகளுக்கு விடுமுறை

editor