உள்நாடு

ரொ​சல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் முழுக்குடும்பமும் ரயில் மோதி பலி

(UTV | கொழும்பு) – வட்டவளை- ரொ​சல்ல ரயில் நிலையத்துக்கு அண்மையில், ரயிலுடன் மோதுண்டதில், ஒரே குடும்பத்தினை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் பலியாகியுள்ளனர்.

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உட​ரட்ட மெனிக்கே ரயில் மோதுண்டே இம்மூவரும் மரணித்துள்ளார்.

அவர்கள், ரயிலுக்கு பாய்ந்துள்ளனரா? என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த மூவரும் மஸ்கெலியா- சாமிமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் உயிரழப்பதற்கு முன்னர், ரொசல்ல ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஒருவரிடம், ரயில் வரும் நேரம் குறித்து வினவி விட்டு, ரொசல்ல ரயில் நிலையத்திலிருந்து வட்டவளை ரயில் நிலையம் நோக்கி நடந்துள்ளனர்.

உயிரிழந்த மூவரில் ஒருவர் 40 வயதுடைய சாந்தகுமார் ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

-ரஞ்சித் ராஜபக்ஸ

Related posts

இன்று முதல் வெளிநாட்டு தபால் கட்டணம் உயர்வு

களனி பல்கலைகழக சிசிரிவி ​விவகாரம் – நால்வருக்கு விளக்கமறியல்

கொரோனாவால் தொழிலை இழந்த தனியார் ஊழியர்கள் கவனத்திற்கு [VIDEO]