உலகம்

ரோஹிங்கிய அகதிகள் சென்ற படகு விபத்து – 14 பேர் பலி

(UTV|பங்களாதேஷ் ) – ரோஹிங்கிய அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று பங்களாதேஷின் தெற்கு கடற்பரப்பில் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பங்களாதேஷ் முகாம்களில் உள்ள சுமார் 130 ரோஹிங்கிய அகதிகளுடன் மலேசியாவுக்கு செல்ல முற்பட்ட படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மீட்க்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் பெண்களும், குழந்தைகளும் அடங்குவதுடன், குறித்த படகில் பயணித்த 70 பேர் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது.

editor

சமூக வலைதளங்களில் ‘ட்ரம்ப்’ முடக்கம்

முகக்கவசம் தொடர்பில் புதிய ஆலோசனை