அரசியல்உள்நாடு

ரெஹான் ஜயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகினார்

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதி அமைப்பாளரும், வெலிகம முன்னாள் நகர மேயருமான ரெஹான் ஜயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்தில், கட்சியின் தற்போதைய கொள்கைகள் குறித்து தான் திருப்தியடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவொரு சுயநல அரசியல் நடவடிக்கையல்ல என்றும், தாய்நாட்டிற்கு முன்னாலுள்ள குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால சவால்களை வெற்றிகொள்வதற்காக, தனிப்பட்ட நலன்களைப் புறந்தள்ளி எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம் என்றும் ஜயவிக்ரம தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

சீராகும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம்

இலங்கை ரக்பி சங்கத்தின் புதிய தலைவராக பவித்ர பெர்னாண்டோ தெரிவு

editor

வென்னப்புவவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor