உள்நாடு

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர்களைத் தாக்கிய குளவிக் கூட்டம்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் குழுவொன்று குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

பொகவந்தலாவ, மோரா தோட்டத்தில் அமைந்துள்ள பயிர்ச்செய்கை பயிற்சி நிலையத்தில் நடைமுறைப் பயிற்சிப் பட்டறைக்காக வந்திருந்த மாணவர்கள் குழுவொன்று, இன்று (14) மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூட்டை கலைத்தமையால் இந்த குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

குளவித் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் குழுவில் இருந்து 6 மாணவர்கள் காயமடைந்த நிலையில் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடைமுறைப் பயிற்சிப் பட்டறைக்காக பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நாட்களில் தங்கியிருந்து பங்கேற்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஐந்து மாவட்டங்களுக்கு தொடரும் முடக்கங்கள்

இன்று மாலை அமைச்சரவை கூடுகிறது

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய ​மேலும் 181 இலங்கையர்கள்