உள்நாடு

ருவான் தலைமையில் ஐ.தே.கட்சியின் வருடாந்த விழா ஏற்பாடுகள்

(UTV | கொழும்பு) –   ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு நிறைவு விழாவின் பணிகளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜயவர்தன தலைமையிலான குழுவினால் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் செப்டெம்பர் 06ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் “ஒன்றுபடுவோம்” எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.

கட்சியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் செப்டம்பர் 4 ஆம் திகதி அனைத்து மத வழிபாடுகளும் நடைபெற உள்ளன.

Related posts

கணவரிடம் தப்பிப்பதற்கு பொலிஸாரை ஏமாற்ற நகை திருட்டு நாடகம் – நிந்தவூர் பெண் கைது

editor

துணை வைத்திய நிபுணர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

editor

நாட்டின் சில பகுதிகளில் மழை