உள்நாடு

ரிஷாதின் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டமை மற்றும் ஹரின் பெர்னாண்டோவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, இன்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், சிறப்புரிமைகள் குறித்த கேள்வியை எழுப்பிய ரணில் எம்.பி, ரிஷாட் பதியுதீனைக் கைதுசெய்தமையும் ஹரின் பெர்னாண்டோவிடம் விசாரணை மேற்கொள்வதும் சபையின் சலுகையை மீறுவதாகவும், இவற்றுக்கான காரணங்களை சபைக்குத் தெரிவிக்க பொலிஸார் கடமைப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

Related posts

பொது போக்குவரத்து சேவை தொடர்பிலான அறிவிப்பு

அக்கரைப்பற்று மத்திய கல்லூரியில் தாக்குதல் சம்பவம் : பிணையில் விடுதலையான சபீஸ்

நாளை காலை 7 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்