உள்நாடு

ரிஷாதின் அடிப்படை உரிமை மீறல் மனு : மூன்றாவது நீதியரசரும் விலகல்

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் கைது நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகளில் இருந்து மற்றுமொரு நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் விலகியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் இருந்து இதுவரையில் மூன்று நீதியரசர்கள் விலகியுள்ளனர்.

குறித்த மனு எதிர்வரும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(விரிவான தகவல்கள் விரைவில்)

Related posts

ஜனாதிபதியின் இரங்கல் செய்தி!

இலங்கையுடன் நெருங்கி பணியாற்ற அமெரிக்கா தயார்

பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு பதவி உயர்வு