உள்நாடுபிராந்தியம்

ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் யானைகள் அட்டகாசம் – நுழைவாயில் சுற்றுமதில் சேதம்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் காட்டு யானைகள் உட்புகுந்து பாடசாலை நுழைவாயில் மற்றும் சுற்றுமதில் ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.பி.ஜெமீல் தெரிவித்தார்.

ரிதிதென்ன குடியிருப்பு பகுதிக்குள் திங்கட்கிழமை (4) அதிகாலை 1 மணியளவில் உட்புகுந்த யானைகள் பாடசாலை நுழைவாயில் மற்றும் சுற்றுமதிலை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து

ரிஷாதின் கைது சட்ட ஆட்சியையும் நீதி முறைமையையும் குழிதோண்டிப்புதைக்கும் செயல்

காவல்துறை உத்தியோகத்தர் இருவருக்கு 28 வருட சிறைத்தண்டனை [VIDEO]