ஜனாதிபதி ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கை ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய மகுலேவே விமல நாயக்க தேரரைச் சந்தித்து, ஆசி பெற்றார்.
மீரிகம மினிஒலுவ ஸ்ரீ வித்யாவாச மகா பிரிவேனாவிற்கு நேற்று (01) பிற்பகல் சென்ற ஜனாதிபதி, மகாநாயக்க தேரரைச் சந்தித்து, அவரது நலம் விசாரித்ததோடு அவருடன் சிறிது நேரம் உரையாடினார்.
அதேநேரம் ஜனாதிபதி அமரபுர மகா நாயக்க தேரரை சந்தித்தும் ஆசி பெற்றார்.
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கை அமரபுர மகா பீடத்தின் வணக்கத்திற்குரிய கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி மகா நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
வெள்ளவத்தையில் உள்ள அமரபுர மகா பீட பிக்கு தலைமையகத்திற்கு நேற்று (01) பிற்பகல் சென்ற ஜனாதிபதி, மகா நாயக்க தேரரை சந்தித்து அவரது நலம் விசாரித்து சிறிது நேரம் உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
