கேளிக்கை

ராதிகாவுக்கு கொரோனா

(UTV | இந்தியா) –  சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நடிகை ராதிகா சரத்குமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.

இதனிடையே தனது கணவர் சரத்குமார், கமல்ஹாசன் மற்றும் சமக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ராதிகா பிரசாரம் மேற்கொண்டார்.

நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், சரத் குமாருடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். இந்நிலையில், இன்று அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் காசோலை மோசடி வழக்கில் இன்று நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

‘நான் வாக்களித்து விட்டேன் நீங்கள்?’ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரஹ்மான்…

மதுவில் சிக்கிய மாது

கமல்ஹாசனுக்கு வில்லனா விஜய்?