உலகம்

ராணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தடையாகும் கொரோனா

(UTV |  இங்கிலாந்து) – இங்கிலாந்து ராணியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் திகதி லண்டனில் மிகச்சிறப்பான கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் 95-வது பிறந்த நாள் அடுத்த மாதம் 21ம் திகதி வருகிறது.

குறித்த கொண்டாட்டத்தின் போது, 1,400 படைவீரர்கள், 200 குதிரைகள் அணிவகுப்புடன் மிகச்சிறப்பான கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பொது முடக்கம் அமுலில் இருந்ததால் இந்த கொண்டாட்டம் இரத்தானது.
வின்ட்சார் கோட்டையில் எளிமையாக ராணியின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது.

இந்த ஆண்டும் கொரோனா காரணமாக ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்த நாள் கொண்டாட்டம், தொடர்ந்து 2-வது ஆண்டாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலை பக்கிம்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Breaking news = விஜயகாந்த் காலமானார் !

அவுஸ்திரேலியா அனுமதி

‘எவர் க்ரீன்’ லேசாகத் திரும்பியது