சவுதி அரேபியாவிலுள்ள பொழுதுபோக்குப் பூங்காவில் சுற்றிக் கொண்டிருந்த ராட்டினம் திடீரென பாதியாக உடைந்து விழுந்தது.
அந்தச் சம்பவத்தில் குறைந்தது 23 பேர் காயமுற்றனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று (31) ஹடா (Hada) எனும் பகுதியில் உள்ள Green Mountain Park பூங்காவில் சம்பவம் நடந்தது.
360 டிகிரி முன்னும் பின்னும் ஊஞ்சலாடக்கூடிய அந்த வட்டமான ராட்டினத்தின் நடுக் கம்பம் திடீரென பாதியாக உடைவதைக் காணொளியில் பார்க்க முடிகிறது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
விசாரணை முடியும்வரை பூங்காவைத் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.