உள்நாடு

ராஜிதவுக்கு எதிரான மனு விசாரணை செவ்வாயன்று

(UTV|கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவானால் வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீள் பரிசீலனை மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பில் எதிர்வரும் 21ம் திகதி அறியப்படுத்துவதாக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

​வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கடந்த மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ராஜிதவை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்டமா அதிபரால் குறித்த மீள் பரிசீலனை மனு தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை – மட்டக்களப்பு பெண்களுக்கு உடனே உதவி வழங்கிய அமைப்பு

editor

இலங்கை தமிழ் அரசு கட்சி வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது!

editor

இம்ரான் கான் மாலை இலங்கைக்கு