உள்நாடு

ராஜாங்கனை பிரதேசத்தில் 12,000 பேர் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து, ராஜாங்கனை பிரதேசத்தில் 12,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரண்டாவது தடவையாக பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாளைய தினம் (18) ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கந்தக்காடு சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரை 5000 பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

வீடியோ | இறக்காமம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆஷிக் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.!

editor

ராஜிதவின் பிணை மனு விசாரணை; நீதவான் நீதிமன்றில்