உள்நாடு

ராகமை, கந்தானை, வத்தளை உள்ளிட்ட பகுதிகளில் STF மற்றும் பொலிஸார் விசேட சோதனை

அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இராணுவ படையினர், கடற்படை, சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை (04) ராகமை, கந்தானை மற்றும் வத்தளை உள்ளிட்ட பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்ட ஒழுங்கை மீட்டெடுப்பதற்கும் குற்றம் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய வீதிகளிலும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சோதனைக்கு உடப்படுத்தப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமை (03) ராகமை மற்றும் கந்தானை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதால் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் மழையுடனான காலநிலை

2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில்

ஜனாதிபதிக்கும் மேல் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor