ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய தடைகளை அறிவித்துள்ளது.
உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த தடைகள் விதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் ஆகியவற்றை குறிவைத்து அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.
இத்தகைய தடைகளை விதிப்பது அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உதவும் என்று தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த தடை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 03 சதவீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.