ரஷ்யாவின் குரில் தீவுகளில் இன்று (25) 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதோடு இந்த மாதத்தில் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள நான்காவது பெரிய நிலநடுக்கமாக இந் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.