உலகம்

ரஷ்யாவில் இன்று மட்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா

(UTV|கொழும்பு)- ரஷ்யாவில் இன்று மட்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ரஷ்யாவில் ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச பாதிப்பு இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, ரஷ்யாவில் 134,687 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; 1,280 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் அதிவேகமான பரவி வரும் வைரஸ் பரவலை எதிர்கொள்ள அந்த நகரம் முழுவதும் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மாஸ்கோவில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 40,000 பேருக்கு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Related posts

தீ விபத்தில் கொரோனா தொற்றாளர்கள் 8 பேர் பலி

பதவி நீக்கம் செய்யப்பட்ட சீன பாதுகாப்பு அமைச்சர்!

அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி