உள்நாடு

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ வந்தடைந்தது

(UTV | கொழும்பு) – ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி ​நேற்று (03)இரவு இலங்கையை வந்தடைந்துள்ளது.

அதனடிப்படையில் முதல் தொகுதியில் 15,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசிகளை பொறுப்பேற்க இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில், பொறுப்பேற்கப்பட்ட தடுப்பூசிகளை பின்னர் சுகாதார அமைச்சிடம் அவர் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியை இந்நாட்டு அவசர தேவைக்காக பயன்படுத்த கடந்த தினம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதற்கமைவாக 7 மில்லியன் தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ரணில் மாமா விற்பனை செய்கின்ற போது அநுர மருமகன் அமைதி காக்கிறார் – சஜித்

editor

இரண்டு மாதங்களில் பாதாள உலகத்தை அழிப்பதாகக் கூறிய அரசாங்கத்தால், இன்று இந்தக் கொலைக் கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது போயுள்ளது – சஜித்

editor

மஹாபொல புலமைப்பரிசில் – மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை