உள்நாடு

ரஷ்ய படையினரின் பிடியில் இருந்த 7 இலங்கை மாணவர்கள் மீட்பு

(UTV |  கார்கிவ்) – உக்ரைன் ஜனாதிபதி விளாட்மிர் ஜெலென்ஸ்கி காணொளி ஊடகவியலாளர் சந்திப்பில், மார்ச் மாதம் முதல் ரஷ்ய படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“கார்கிவில் உள்ள குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களாக இருந்த ஏழு இலங்கை பிரஜைகள் மீட்கப்பட்டனர். உக்ரைனை ஆக்கிரமித்த ரஷ்ய வீரர்கள் மார்ச் மாதத்திலிருந்து அவர்கள் பிடித்து வைத்திருந்தனர்,” என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

Related posts

ஈ.டீ.ஐ பிரதான காரியாலயத்திற்கு முன்பு போராட்டம்

ஹஜ் கடமை பற்றி ஓர் அறிமுகம்!

திருமணத்தில் நடனமாடிய  யுவதி மரணம்