வகைப்படுத்தப்படாத

ரஷிய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதினின் அரசியல் எதிரி போட்டியிட தடை

(UTV|RUSSIA)-ரஷிய அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு (2018) மார்ச் 18-ந்தேதி நடக்கிறது. அதில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்த முறை எந்த கட்சியையும் சாராமல் சுயேட்சை ஆக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (41) போட்டியிட முடிவு செய்து இருந்தார்.

இவர் அதிபர் புதினின் தீவிர அரசியல் எதிரி ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளாக புதினுக்கு எதிராக ரஷியா முழுவதும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி மக்கள் ஆதரவை திரட்டினார். இதன் மூலம் புதினுக்கு எதிரான அலை உருவானது.

இந்த நிலையில் அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டனையும் வழங்கப்பட்டு அது முடிவடையாமல் நிலுவையில் உள்ளது. எனவே ரஷிய அரசியல் சட்டப்படி அவர் போட்டியிட முடியாத நிலை உள்ளது.

இதற்கிடையே அது குறித்து பரிசீலிக்கும்படி நவால்னி ரஷியாவின் மத்திய தேர்தல் கமி‌ஷனிடம் கோரிக்கை விடுத்து மனுவும் அளித்தார். இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிப்பது குறித்து தேர்தல் கமி‌ஷனில் இடம் பெற்றுள்ள 13 உறுப்பினர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் 12 பேர் நவால்னி போட்டியிட தடை விதித்து வாக்களித்தனர். ஒருவர் மட்டும் ஓட்டு போடவில்லை. இதன் மூலம் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவ தற்கான தடை உறுதியாகி விட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நவால்னி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், அதுகுறித்து ரஷியா முழுவதும் பிரசாரம் நடத்த இருப்பதாகவும் கூறினார்.

ரஷிய அரசியலில் புதின் தொடர்ந்து 17 ஆண்டுகளாக மிக உயரிய பதவிகள் வகுத்து வருகிறார். தற்போது தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் மேலும் 6 ஆண்டுகள் அதாவது 2024-ம் ஆண்டு வரை அதிபராக தொடர்ந்து பதவி வகிப்பார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அமெரிக்காவில் கடுங்குளிர் – 8 பேர் உயிரிழப்பு

Venezuela crisis: Opposition announces talks in Barbados

මරණීය දණ්ඩනය ක්‍රියාත්මක කිරීම නොකරන ලෙස ශ්‍රේෂ්ඨාධිකරණයෙන් නියෝගයක්