வகைப்படுத்தப்படாத

ரஷியாவில் பேருந்து தீப்பிடித்து வெடித்ததில் 3 பலி

(UTV|RUSSIA)-ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தின் அருகே மினி பேருந்து தீப்பிடித்து வெடித்ததில் 3 பேர் பலியாகினர்.

ரஷிய நாட்டில் மேக்னிடோகார்ஸ்க் என்ற நகரில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரவடா ஆகிய இரு தெருக்கள் சந்திக்கும் பகுதியில் சென்று கொண்டிருந்த மினி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் பேருந்தில் இருந்த 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

மினி பேருந்தினுள் 2 எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எரிவாயு உபகரணங்கள் செயலிழந்ததால் பேருந்து தீப்பிடித்தபோது, எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததாக உள்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த பகுதி அருகே நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.  இதில் 9 பேர் பலியாகினர்.  6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலரைக் காணவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

 

 

 

Related posts

2017ல் பாதணி மற்றும் தோற்பொருள் ஏற்றுமதி மூலம் 1800 கோடிக்கு மேல் வருமானம்

இராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி பயணித்த வாகனம் விபத்து

Navy apprehends 6 Indian nationals with 2379 kg of beedi leaves in Lankan waters [VIDEO]