உள்நாடு

ரயில் பாதையில் பயணித்த தம்பதி பலி

தெஹிவளை ரயில் பாதையில் பயணித்த தம்பதியொன்று கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (04) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பதுளை, பதுலுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஹெரோயின் போதைப்பொருளுடன் 9 பேர் கைது

இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை – ஜனாதிபதி அநுர (விசேட உரை தமிழில்)

editor

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு