உள்நாடு

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வேலை நிறுத்தம் காரணமாக நேற்று பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதோடு ஒரு சில ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்ட போதிலும், நேற்றைய தினம் சுமார் 70 ரயில் சேவைகள் இயக்கப்பட்டதாக ரயில்வே பதில் முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப இயக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Related posts

இலங்கை கோழி இறைச்சி சீனாவுக்கு ஏற்றுமதி – அமைச்சரவை அனுமதி

editor

மாணவன் சரியாக முடி வெட்டவில்லை என தாக்கிய அதிபருக்கு விளக்கமறியல்

editor

50 பயணிகளுடன் பயணித்த பஸ் – திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம்

editor