உள்நாடு

ரயில் தடம்புரள்வு – வடக்கு புகையிரத சேவை பாதிப்பு

(UTV|கொழும்பு) – வடக்கு நோக்கிய புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

நேற்றிரவு(16) கொழும்பு, கோட்டையிலிருந்து தலைமன்னார் வரை பயணித்த புகையிரதம், செனரத்கம பகுதியில் தடம்புரண்டமை காரணமாக இவ்வாறு புகையிரத போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக, வடக்கு புகையிரத மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரதங்கள், கல்கமுவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், புகையிரத கட்டுப்பாட்டறை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றை நோக்கி சென்ற அதிசொகுசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..! நால்வர் காயம்…

அடிப்படை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் ஆட்சிக்காக ஒன்றிணைவோம் – சஜித் பிரேமதாச

editor

2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் 43 வாக்குகளால் நிறைவேற்றம்