சூடான செய்திகள் 1

ரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்

(UTV|COLOMBO) இலங்கை ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறியுள்ளார்.

இலங்கை ரயில் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இயந்திர சாரதிகள், புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள், வீதி பரிசோதகர்கள் போன்றவர்கள் மீண்டும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.

 

 

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

48 மணித்தியாலத்தில் 700 பேர் கைது…

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது