உள்நாடு

ரயில் சேவைகளை மட்டுப்படுத்தக் கோரிக்கை

(UTV | கொழும்பு) –  ரயில் பயணத்திற்கு தேவையான டீசல் மூன்று நாட்களுக்கு மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு ரயில் சேவைகளை மட்டுப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கையிருப்பு குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளதால் எரிபொருள் பாவனையில் அவதானமாக இருக்குமாறு எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளரின் மேலதிக செயலாளர் சமிந்த ஹெட்டியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

மவ்பிம ஜனதா கட்சியின் புதிய அலுவலகம் இன்று திறந்துவைப்பு!

கிணற்றிலிருந்து ஒருவரின் சடலம் மீட்பு – காவத்தமுனையில் சம்பவம்

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு