உள்நாடு

ரயில் கழிவறையில் மீட்கப்பட்ட சிசுவின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(UTV | கொழும்பு) – ரயில் கழிவறையில் மீட்கப்பட்ட சிசுவின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (10) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த புகையிரதத்தின் கழிவறையில் விடப்பட்ட சிசுவின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

26 வயதுடைய திருமணமாகாத இருவர் பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (10) இரவு 7 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த மீனகயா புகையிரதத்தில் விடப்பட்ட இந்த சிசுவை பயணிகளும் புகையிரத அதிகாரிகளும் கண்டெடுத்துள்ளனர்.

பின்னர் சிசுவின் பெற்றோரை கண்டறிய பொலிஸார் விசாரணை நடத்தி, கிடைத்த தகவலின்படி அவர்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பண்டாரவளை நாயபெத்த மற்றும் கொஸ்லந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான இளைஞன் தெஹிவளை பகுதியில் பணிபுரிந்து வருவதோடு, குறித்த பெண்ணிற்கு குழந்தை பிறக்க உள்ளதாக கேள்விப்பட்டு, அவரை கொழும்பு பகுதிக்கு அழைத்து வந்து தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை போலீசார் மேட்கொண்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு Pfizer தடுப்பூசி

கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜரானார் அமைச்சர் விஜித ஹேரத்

editor

அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வௌியான தகவல்

editor