உள்நாடுபிராந்தியம்

ரயில் கடவையில் விபத்து – ஸ்தலத்திலேயே ஒருவர் பலி – ஒருவர் காயம்

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுர்து மாவத்தை திசை நோக்கிய கிளை வீதியில், பாதுகாப்பற்ற ரயில் கடவையில், ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து நேற்று (05) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலிலுடனே மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், பின்னால் பயணித்த நபர் பலத்த காயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், நீர்கொழும்பு – பெரியமுல்ல பள்ளி வீதியைச் சேர்ந்த 61 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

BREAKING NEWS – தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானது

editor

போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது

editor