உள்நாடு

ரயில்வே பொது முகாமையாளர் தனது கடமைகளை ஆரம்பித்தார்

ரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட ரவீந்திர பத்மபிரிய, இன்று (13) தனது கடமைகளை ஆரம்பித்தார்.

இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரியான இவர், இதற்கு முன்னர் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றியுள்ளார்.

ரயில்வே பொது முகாமையாளராக பணியாற்றி வந்த தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியிலிருந்து நீக்க சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய, அவர் இலங்கை பொறியியல் சேவையின் விசேட தரத்தில் பொருத்தமான பதவிக்கு நியமிக்கப்பட உள்ளார்.

Related posts

கோலி பற்றிய கருத்திற்கு வருத்தம் தெரிவித்த குசல்!

குர்ஆனை அவமதித்த வழக்கு – ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை

editor

பவி தீவிர சிகிச்சைப் பிரிவில்