சூடான செய்திகள் 1

ரயில்வே தொழிற்சங்க மற்றும் ஜனாதிபதி இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி

(UTV|COLOMBO)-ரயில்வே பணியாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று(23) முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்மானமின்றி முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, எதிர்வரும் நடவடிக்கை குறித்து தீர்மானம் ஒன்றினை எட்டுவதற்கு இன்று(23) மாலை தமது தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாட உள்ளதாகவும் ரயில்வே காப்பாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் பீ.எம்.பீ.பீரிஸ் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

சீன சிகரெட்டுக்கள் குறித்து மங்கள விளக்கம்

தற்போதைய அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு