உள்நாடுபிராந்தியம்

ரயிலுடன் மோதிய முச்சக்கர வண்டி – ஒருவர் பலி – 2 பெண்கள் படுகாயம்

வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இன்று (03) காலை மட்டக்களப்பிலிருந்து – கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், பின் இருக்கையில் பயணித்திருந்த 2 பெண்கள் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தானது, முச்சக்கரவண்டி சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதோடு, இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மைத்திரி தலைமையில் ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

திங்கள் தீர்வு வழங்கினால் நாம் போராட்டத்தினை கைவிடத் தயார்

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 52 பணிப்பெண்கள்