உள்நாடுபிராந்தியம்

ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி – இருவர் படுகாயம்

அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், கொஸ்கம, அளுத்தம்பலம ரயில் கடவையில் முச்சக்கர வண்டியுடன் மோதி இன்று (12) காலை விபத்துக்குள்ளானது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயிலுடன் மோதிய முச்சக்கர வண்டியின் இயந்திரம் கழன்று பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதும் நேரத்தில் சாரதியும் பெண் ஒருவரும் முச்சக்கர வண்டியில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து நடந்த நேரத்தில் ரயில் கடவை கேட் மூடப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், முச்சக்கர வண்டியின் சாரதியின் இளைய சகோதரனே ரயில் கடவை கேட் காவலர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

களுகங்கை நீரை பருக வேண்டாம் என எச்சரிக்கை

ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு மற்றுமொரு குறை

“நாடாளுமன்ற கலாச்சாரத்தை மாற்றுவோம்” – பிரதமர்