பயணச்சீட்டின்றி ரயிலில் பயணித்த நாற்பது பேரை கைது செய்ததாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 23 பேர்,பெண்களாவர். பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் (29) காலையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்னும் சிலர் வௌியே பாய்ந்து தப்பிச் சென்றனர்.சுமார் மூன்று மணி நேரம் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது.
காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை இச்சோதனை நடத்ப்பட்டது.
கைது செய்யப்பட்ட 30 பயணிகளிடமிருந்து உடனடியாக 91,200 ரூபா அபராதத்தை ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் வசூலித்துள்ளனர்.
ஏனையோர் பணம் இல்லாதிருந்ததால், மாற்று வழிகள் கையாளப்பட்டிருந்தன.