உள்நாடுபிராந்தியம்

ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட பெண் – தவறி வீழ்ந்து உயிரிழந்த சோக சம்பவம்

சாவகச்சேரியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில், சாவகச்சேரி – சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.

இருப்பினும் அவர் இருந்த பெட்டியின் வாயில் ஊடாக இறங்குவதற்கு இறங்கு தளம் இல்லாத காரணத்தால் வேறு பெட்டி ஊடாகச் சென்று இறங்க முற்பட்ட வேளையில் ரயிலும் நகர்ந்ததால் பெண் கீழே வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.

சிகிச்சைக்காக உடனடியாக அவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related posts

நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்…!!

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றும் விசேட கலந்துரையாடல்

தேசிய மின் கட்டமைப்புடன் 163 MW மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளது