சூடான செய்திகள் 1

ரயனுடன் நாடு கடத்தப்பட்ட நால்வரும் விடுதலை…

(UTV|COLOMBO) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனுடன் நாடு கடத்தப்பட்ட ஏனைய நான்கு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து நடத்திய விசாரணையின் பின்னர் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும் கஞ்சா வைத்திருந்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிரபல நடிகர் ரயன் வேன்ரோயன் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க CID யில் முன்னிலை

editor

இலங்கைக்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை