உள்நாடு

ரம்புட்டான் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ரம்புட்டான் மரங்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

ரம்புட்டான் மரங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சிலர் மின்சார கம்பிகள் கொண்டு பாதுகாப்பு வேலிகள் அமைப்பதால், இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் விராஜ் ரோஹன அபேகோன் தெரிவித்தார்.

அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது பலர் சிகிச்சை பெற்று வருவதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் விராஜ் ரோஹன அபேகோன் குறிப்பிட்டார்.

இதேவேளை, சிறு குழந்தைகளுக்கு பெற்றோர் ரம்புட்டான் கொடுக்கும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்கமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டை நேசிக்கும் எதிர்க்கட்சி என்ற வகையில், ஜி எஸ் பி பிளஸுக்காக எப்போதும் குரல் எழுப்பி வருகிறது – சஜித் பிரேமதாச

editor

இன்று 7 1/2 மணித்தியால மின்வெட்டு அமுலுக்கு