ரந்தெனிகலயில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்தொன்று, ரந்தெனிகல 36 மற்றும் 37 ஆவது தூண்களுக்கு இடையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (29) இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்தானது வீதியிலுள்ள பாறையொன்றில் மோதியதில் பேருந்தில் பயணித்த 12 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி கந்தெகெட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.