வகைப்படுத்தப்படாத

ரதுபஸ்வல சம்பவம் – பிரிகேடியர் மீண்டும் விளக்கமறியலில்

(UDHAYAM, COLOMBO) – குடிநீர் கோரி ரதுபஸ்வல பிரதேசவாசிகள் 2013 ஆம் ஆண்டு வெலிவேரி நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே துப்பாக்கி பிரயோகம் மற்றும் தாக்குதலில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களை எதிர்வரும் 28ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கம்பஹா பிரதான நீதவான் டீ.ஏ.ருவண் பதிரண முன்னிலையில் அவர்கள் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

பல்கலைகழக மேம்பாலம் இடிந்து வீழ்ந்த விபத்தில் நால்வர் பலி

மியன்மாரின் நாடாளுமன்றத்தை உறுதிபடுத்துவதற்கு இலங்கை உதவ வேண்டும்

சைட்டம் விவகாரம்: அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்!