அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ரணில், நாமலின் தாளத்துக்கு ஆட முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள முறையாக இடம்பெற்று வருகின்றன.

இதற்குத் தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருவதால், நிச்சயம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்களென கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

நாமல் ராஜபக்க்ஷவின் நீலப்படையணியிலிருந்த சாணக்கியன் மற்றும் ரணிலின் விசுவாசியான சுமந்திரன் ஆகியோரின் தாளத்துக்கேற்ப ஆடுவதற்கு, எமது மக்கள் கொண்டை கட்டிய சீனர்கள் அல்லர் எனவும் அமைச்சர் கூறினார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்து வரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 32 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 300 பேருக்கும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்விலே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பளை மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் கடந்த (13) புதன்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பிரதியமைச்சர் கலாநிதி சுனில் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் கே.நிஹால், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், சாவகச்சேரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

நாட்டில் நிலையான இயக்க நடைமுறையை மேம்படுத்த நடவடிக்கை – அலி சப்ரி

கலந்துரையாடல் தோல்வி-தொடரும் தொழிற்சங்க போராட்டம்

குற்றச்செயல்கள் தொடர்பில் தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கம்