அரசியல்உள்நாடு

ரணில்-தமுகூ சந்திப்பில் உரையாடப்பட்டது என்ன?

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினர் இடையில் சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

விக்கிரமசிங்கவின் அழைப்பின் பெயரில் அவரது ஃப்ளவர் வீதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஒத்துழைப்பது பற்றி உரையாடல் இடம் பெற்தாக கூட்டணி தரப்பில் தெரிவிக்க பட்டது.

ரணில் விக்கிரமசிங்க நாளை ரஷ்யா செல்லவுள்ளதால் இந்தச சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்ய பட்டதாக கூறிய கூட்டணி தரப்பு, உள்ளூராட்சி மன்ற விவகாரம் தவிர்த்த ஏனைய விடயங்கள் உரையாட பட்டனவா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டது.

Related posts

சஜித்தின் தாதியர் தின வாழ்த்துச் செய்தி

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

editor

ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி CIDயில்