அரசியல்உள்நாடு

ரணில் – சஜித் இருவரும் எங்களுக்கு முக்கியம் – ஒன்றிணைந்து பயணிக்கும் காலமே தற்போது ஆரம்பமாகியுள்ளது – ஹர்ஷ டி சில்வா எம்.பி

“எங்களின் முன்னாள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் எங்களுக்கு முக்கியம். தற்போதைய தலைவர் சஜித் பிரேமதாசவும் எங்களுக்கு முக்கியம்.

இளைஞர் அணியும் முக்கியம். இவர்கள் சகலரையும் இணைத்துக்கொண்டு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

சகலரையும் இணைத்துக்கொண்டால் பலமானதொரு அணியை உருவாக்கிக் கொள்ள முடியும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற சமய அனுஷ்டான நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட் டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘ஆதரவாளர்களினாலேயே கட்சியொன்று கட்டியெழுப்பப்படுகிறது.

கட்சி யாருடைய தனிப்பட்ட விடயமல்ல. அதில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி என்ற வேறுபாடு இல்லை.

கட்சி என்பது எனக்கோ, ரணிலுக்கோ, சஜித்துக்கோ சொந்தமானதில்லை. கட்சி ஆதரவாளர்களுக்கு சொந்தமானது.

அடிமட்டத்திலுள்ளவர்களை இணைத்துக்கொள்ளவே நாங்கள் ஆரம்பத்திலிருந்து முயற்சித்து வருகிறோம்.

ரணில், சஜித் உள்ளிட்ட ஏனைய சகலரதும் தலைமைத்துவத்துக்கு ஆதரவாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

இரு கட்சிகளினதும் ஒன்றிணைவு நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்.

எங்களின் முன்னாள் தலைவரும் எங்களுக்கு முக்கியம். தற்போதைய தலைவரும் முக்கியம். இளைஞர் அணியும் முக்கியம்.

இவர்கள் சகலரையும் இணைத்துக்கொண்டு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

சகலரையும் இணைத்துக்கொண்டால் பலமானவொரு அணியை உருவாக்கிக் கொள்ள முடியும்.

கிராம மட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவா ளர்கள் என்று பிளவுபட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது.

ஒன்றிணைந்து பயணிக்கும் காலமே தற்போது ஆரம்பமாகியுள்ளது’’ என்றார்.

Related posts

மற்றுமொரு கொவிட் திரிபு ஏற்படும் அபாயம்

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாண பணிகள் மீண்டும்

editor

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை மறுதினம்

editor