உள்நாடு

ரணிலின் ரீட் மனு விசாரணைக்கு

(UTV | கொழும்பு) –  முன்னாள் பிரதமரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, தேவிகா அபேரத்ன மற்றும் டி. எம். சமரகோன் ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த மனுவை ஜனவரி 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.

Related posts

கோயம்புத்தூரில் இருந்து நாடுதிரும்பிய 113 மாணவர்கள்

இலங்கை மாணவர்களை அழைத்து வர விசேட விமான சேவை

மஹிந்த ராஜபக்ஷஅடுத்த பிரதமரா? விளக்கமளிக்கும் SLPP