கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
விக்ரமசிங்கவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை தொடர்பான அனைத்து தீர்மானங்களும் அவரது குடும்ப உறுப்பினர்களால் எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.