உள்நாடு

இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்திலிருந்து வெளியானார் ரஞ்சன் [UPDATE]

(UTV|கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்.

குரல் பரிசோதனைக்காக இன்று(07) காலை 10.30 மணிக்கு பத்தரமுல்ல, பெலவத்த பகுதியில் அமைந்துள்ளஇரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அவரை குரல் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

——————————————————————————————-[UPDATE]

ரஞ்சன் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையில்

(UTV|கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குரல் பரிசோதனைக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.

Related posts

குவைட் நாட்டிற்கு சென்ற 32 பெண்கள் நாடு திரும்பினர்

முதலாம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு

பொது மன்னிப்பு கைதிகளின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு