உள்நாடு

ரஞ்சனின் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – தமது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுத்து நீதிபேராணையை பிறப்பிக்குமாறு சிறை தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ஜூன ஒபேசேகர மற்றும் மயாதுன்ன கொரயா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

நிபந்தனையுடனான மீளழைத்துவரும் நடவடிக்கைகள் அரசினால் மீண்டும் அறிமுகம்

நாடளாவிய ரீதியில் மேலதிக எரிபொருட்களை விநியோகிக்க நடவடிக்கை